லைஃப்-ல உங்களுக்கு கிடைச்ச சிறந்த GIFT எது..? தல தோனி சொன்ன ஜாலி பதில்.. ட்ரெண்ட் ஆகும் THROWBACK வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான தோனியின் பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகியுள்ளது.

தல தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார். 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தன்னுடைய தோழியான சாக்ஷியை தோனி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஸிவா என பெயர்சூட்டினர் தோனியும் அவரது மனைவியும்.
பரிசு
இந்நிலையில், தோனியின் பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பார்வையாளரில் ஒருவர் தோனியிடம்,"உங்களது வாழ்க்கையில் நீங்கள் பெற்ற சிறந்த பரிசு எது?" எனக் கேட்கிறார். இந்த கேள்வியை கேட்டதும் தோனி தீவிரமாக யோசிக்கத் துவங்குகிறார். அப்போது அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் மந்த்ரா பேடி இந்த கேள்விக்கு பதிலளிக்க தான் உதவுவதாக கூறுகிறார்.
மேலும், தோனியிடம்,"நான் உங்களுக்கு ஹிண்ட் கொடுக்கிறேன். உங்களுடைய மகள்" என்கிறார். ஆனால், இதனை மறுத்த தோனி,"அது பரிசு இல்லை. அது கடின உழைப்பின் பலன்" எனப் பதிலளிக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
THUG LIFE @MSDhoni 😂🔥pic.twitter.com/J6IS9VackM
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) October 4, 2022

மற்ற செய்திகள்
