எழுதுறாங்களா இல்ல வரையுறாங்களா?.. நெட்டிசன்களை பொறாமைப்பட வச்ச வீடியோ.. யாருப்பா அவரு..?
முகப்பு > செய்திகள் > உலகம்ஒருவர் மிக அழகான கையெழுத்துடன் எழுதும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் பலரையும் இதுபோல எழுத தூண்டியிருக்கிறது இந்த வீடியோ.

கையெழுத்து
பொதுவாக குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது, சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு கையெழுத்து பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் துவங்கிவிடுவார்கள். கையெழுத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தும் வழக்கம் சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காலியோகிராஃபி எனப்படும் அழகாக எழுதும் முறையும் பல இடங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது. சிலருக்கு இது பொழுதுபோக்காகவும் இருக்கிறது. அப்படியொருவர் செய்த வேலை தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இந்த வீடியோவில் ஒருவர் காலியோகிராஃபி வடிவில் பேப்பரில் எழுதுகிறார். ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தையும் சிற்பம் போல செதுக்கும் அவர், அதற்கு உரிய அலங்காரங்களையும் செய்கிறார். கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவை Tansu Yegen என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வீடியோ
அதில் "காலியோகிராஃபி ஒரு கலை என்பதற்கு இதுதான் சான்று" என குறிப்பிட்டுள்ளார் Tansu Yegen. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதுடன் தங்களது எழுத்துக்களையும் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒருவர்,"இந்த வீடியோவை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது" என கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவர்,"காலியோகிராஃபி முறையில் எழுதும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், இவர் எழுதுகிறாரா? அல்லது வரைகிறாரா? எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முயற்சி
மற்றொருவர்,"இது needlepoint பேனா. இதனை பேப்பரில் எழுதுவது சவாலான காரியம். பேனாவில் கொடுக்கப்படும் அழுத்தம் ஆகிவற்றை கணக்கிட்டு எழுதவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்னொருவர்,"மிகவும் அர்ப்பணிப்புடன் அவர் எழுதுகிறார். நானும் இதே மாதிரி எழுத முயற்சித்திருக்கிறேன். ஆனால், முடியவில்லை. இருப்பினும் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்" எனவும் கமெண்ட் செய்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த வீடியோவை இதுவரையில் 5.6 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். 2 மில்லியன் மக்கள் இந்த விடியோவை லைக் செய்ததுடன், சுமார் 37,000 பேர் இந்த பதிவை பகிர்ந்திருக்கின்றனர்.
The proof why Calligraphy is an art pic.twitter.com/NeZEz7bwRj
— Tansu YEĞEN (@TansuYegen) October 6, 2022

மற்ற செய்திகள்
