"எது அந்த படத்தோட பார்ட் 2 வா?".. தோனியை சந்தித்த ஹர்திக்.. வைரல் ஃபோட்டோ.. கேப்ஷன் தான் ஹைலைட்டே!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 26, 2023 02:16 PM

இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. இவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, டி 20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.

Hardik pandya meets ms dhoni pic viral on social media

மேலும் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த அணியாகவும் திகழ்ந்திருந்தது. சர்வதேச போட்டிகளில் ஒரு கேப்டனாக சிறந்த பங்காற்றிய தோனி, அதிலிருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் ஆடி வருகிறார்.

சர்வதேச அணியில் சிறப்பான கேப்டனாக தோனி இருந்தது போல, ஐபிஎல் தொடர்களிலும் சென்னை அணியின் கேப்டனாக வலம் வந்த தோனி தலைமையில், 4 முறை ஐபிஎல் கோப்பையை அந்த அணி கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியும் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Hardik pandya meets ms dhoni pic viral on social media

தோனியை தன்னுடைய மிகப் பெரிய ரோல் மாடலாக பார்ப்பவரில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் தொடரில் கேப்டனான போதும், தோனியுடைய கேப்டன்சி பற்றி நிறைய கருத்துக்களை ஹர்திக் தெரிவித்திருந்தார். அதே போல, பல இடங்களில் ஒன்றாகவும் ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி வலம் வரவும் செய்கின்றனர். நெருங்கிய நண்பர்களாகவும் அவர்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் அவர்கள் சந்தித்து அவர்கள் சந்தித்து கொண்டதாகவும் தெரிகிறது.

ராஞ்சியில் தோனி வீட்டிற்கு சென்று ஹர்திக் பாண்டியா சந்தித்திருந்ததாக தெரிகிறது. தோனி பைக் பிரியர் என்ற சூழலில் அங்கே இருந்த பழைய பைக்கான இரண்டு பேர் பயணிக்கும் லிங் டைப் ஸ்கூட்டர் ஒன்றில் தோனியும், பாண்டியாவும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் தனது கேப்ஷனில் "Sholay 2 விரைவில்" என்றும் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப்பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த திரைப்படம் தான் "Sholay". அந்த படத்தில் லிங்க் டைப் ஸ்கூட்டரில் அமிதாப்பச்சன் வலம் வருவார். அதேபோன்று ஒரு பைக்கில் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளனர். இது தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இருந்த நிலையில் தற்போது டி20 தொடரிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக மோத உள்ளது. இதன் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக ராஞ்சி வந்த போது இந்த புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா எடுத்திருப்பார் என தெரிகிறது.

Tags : #MSDHONI #HARDIKPANDYA #IND VS NZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hardik pandya meets ms dhoni pic viral on social media | Sports News.