'கொரோனா' ஒன்றும் 'பெருந்தொற்று' இல்லை... சொன்னது 'உச்சநீதிமன்ற' நீதிபதி... 'நம்ம நாடு இல்லை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 20, 2020 10:57 AM

கொரோனா ஒன்றும் வேகமாக பரவும் பெருந்தொற்று இல்லை என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Pakistan\'s Supreme Court says corona is not a fast-paced epidemic

பாகிஸ்தானில் கொரோனாவால் இதுவரை 45 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 985 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவை தடுப்பதற்காக அதிகமாக பணம் செலவழிப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஊரடங்கால் மூடப்பட்ட வணிக வளாகங்களை உடனே திறக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டால் வார இறுதியில் மட்டும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.