'இன்டர்நெட்டில் அதிகம் தேடிய வார்த்தை'... 'மீண்டும் சென்னை முதலிடமா'?... 'லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்'... ஷாக்கிங் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 18, 2020 03:17 PM

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மக்களை மிகவும் அதிர்ச்சிக்குக் கொண்டு சென்ற விஷயம், குழந்தைகளின் ஆபாசப் பட விவகாரம். தற்போது இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

Lockdown : Chennai becomes the first place to search Child Porn

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் குறித்து அதிகம் தேடியதில் முதலிடம் பிடித்திருப்பது சென்னை என்பது தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

ஐ.சி.பி.எஃப் (Indian Child Protection Fund)  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் உள்ள 100 நகரங்களைக் கண்காணித்ததில், சென்னை மற்றும் புவனேஸ்வர் தான், அதிக அளவில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைத் தேடியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் தற்போது வளர்த்து வரும் இரண்டாம் கட்ட நகரங்களான, லக்னோ, ஆக்ரா, சிம்லா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை அதிக அளவில் தேடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.