"ஆத்தி கையில கேரம் போர்டு கூட இல்லையே"... "இப்போ எங்கிட்டு போய் மறையுறது?"... திருப்பூர் போலீசார் பாணியில் வீடியோ வெளியிட்ட சேலம் போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றாக கூடி சுற்றி திரிபவர்களை கண்காணிக்க நாடு முழுவதும் காவல்துறை அயராது உழைத்து வருகின்றனர். இருந்த போதும் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொது வெளிகளில் சுற்றி திரிகின்றனர்.
இதனையடுத்து ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் நாட்டின் பல பகுதிகளில் டிரோன் கேமராக்களை பறக்க விட்டனர். சில தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட போலீசார் பறக்க விட்ட டிரோன் கேமராவில் பதிவான காட்சி வைரலானது. கேரம் போர்டு ஆடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் கேமரா பறந்து வருவதைக் கண்ட இளைஞர்கள் தலை தெறித்து ஓடினர். அப்போது இளைஞர் ஒருவர் கேரம் போர்டு கொண்டு தன்னை மறைத்த சம்பவம் அதிகமாக வைரலானது.
இந்நிலையில், திருப்பூர் போலீசார் வழியை பின்பற்றி சேலம் போலீசாரும் டிரோன் கேமராவை பறக்கவிட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் கூட்டமாக நின்று கொண்டிருந்த நபர்கள் கேமராவைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இறுதியில் அவர்களை பிடித்த போலீசார் அந்த இளைஞர்களுக்கு சில நூதன தண்டனைகள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் போலீசார் வீடியோவை தொடர்ந்து தற்போது சேலம் போலீசாரின் இந்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.