ஏடிஎம் மெஷின்ல தொங்கிட்டு இருந்த சாவி.. பதறிப் போன மக்கள்.. கடைசியில் தெரிய வந்த உண்மை
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி: ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பிய அதிகாரி சாவியை அதிலேயே விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் இல்லாத சமயத்தில் வண்டி ஒன்று மூலம் வருவோர் பணத்தை நிரப்புவதை நாம் பார்திருப்போம். அந்த நேரத்தில் ஏ.டி.எம் அலுவலகம் மூடாப்பாட்டிருக்கும் அதோடு துப்பாக்கி ஏந்திய ஒருவர் வேறு வாசலில் காவலுக்காக நிற்பார்.
பணத்தை நிரப்பிய வங்கி ஊழியர்கள்:
இதுபோல மிகுந்த பாதுக்காப்புடன் வந்து பணத்தை ஏ.டி.எம் இயந்திரத்தில் வைத்து விட்டு நிரப்பி செல்வார்கள். இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணத்தை நிரப்பிய வங்கி ஊழியர்கள் சாவியை அப்படியே இயந்திரத்தில் மாட்டியவாறே சென்றிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஏடி.எம்மை சாவியிட்டு திறந்துள்ளனர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தான் இந்த கூத்து நடந்துள்ளது. எப்போதும் போல நேற்று செயல்பாட்டில் இருந்த வங்கி ஏ.டி.எம்மில் மாலை சுமார் 6.30 மணியளவில் பணத்தை நிரப்புவதற்காக வங்கி ஊழியர்கள் ஏடி.எம்மை சாவியிட்டு திறந்துள்ளனர்.
சாவி இயந்திரத்தில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி:
அங்கிருந்த மற்றொரு ஊழியரிடம் பேசியப்படியே பணத்தை நிரப்பிக் கொண்டு இருந்த வங்கி ஊழியர்கள் அசாதாரணமாக ஏ.டி.எம் இயந்திரத்தின் சாவியை ஏ.டி.எம் இயந்திரத்திலேயே விட்டு சென்றுள்ளார். அதன் பின் பணத்தை எடுப்பதற்காக பொதுமக்கள் இன்று காலை ஏ.டி.எம் மையத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது சாவி இயந்திரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போச்சம்பள்ளி காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
பணம் ஏதாவது எடுத்துள்ளார்களா?
அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இயந்திரத்தில் இருந்த சாவியை பத்திரமாக மீட்டு அங்கு வந்த வங்கி ஊழியர் தில்சத் பேகத் என்பவரிடம் சாவியை ஒப்படைத்துள்ளனர். மேலும், இரவில் ஏ.டி.எம்மை பயன்படுத்திய யாரேனும் சாவியை பயன்படுத்தி பணம் ஏதாவது எடுத்துள்ளார்களா என்பதை வங்கி ஊழியர்கள் பரிசோதித்து வருவதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.