ATM பயன்பாடுகளுக்கு புது கட்டணங்கள், புதி விதிகள்..!- ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுக்க புதிய கட்டண விதிமுறைகள் வருகிற ஜனவரி 1-ம் தேதி 2022 முதல் அமல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஏடிஎம்-களில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் கொண்டு பணம் எடுப்பவர்களுக்கு கட்டணம் உயரப் போகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாடு முழுவதுமாகவே அமல்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட முறைகள் தாண்டி ஏடிஎம் பயன்படுத்தி பணம் எடுத்தால் நிச்சயமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வார காலமே இந்தக் கட்டண உயர்வு அமல் ஆவதற்கு உள்ளதால் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இதுகுறித்தத் தகவல்கள் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட முறைகள் தாண்டி நீங்கள் ஏடிஎம் பயன்படுத்தி பணம் எடுத்தால் ஒரு முறைக்கு 21 ரூபாய் கூடுதல் கட்டணம் ஆக வசூலிக்கப்படும். தற்போதைய சூழலில் இந்தக் கட்டணம் 20 ரூபாய் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் விதிப்படி ஒரு வங்கி தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு தனது வங்கி ஏடிஎம்-களில் 5 முறை வரையில் பணம் எடுக்கலாம்.
இந்த 5 முறைகள் வாடிக்கையாளர்களுக்கு சொந்த வங்கியின் ஏடிஎம்-களைப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான இலவச வாய்ப்புகள் ஆகும். இது பணம் எடுக்க மட்டுமல்ல நீங்கள் இருப்பு பார்ப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தினால் கூட அதுவும் இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாமல் வேறு வங்கிகளின் ஏடிஎம்-களை மெட்ரோ நகரங்களில் (பெங்களுரூ, மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஹைதராபாத்) 3 முறை வரையில் பயன்படுத்தலாம்.
இதர நகரங்களில் 5 முறை வரையில் வேறு வங்கிகளின் ஏடிஎம்-களைப் பயன்படுத்த முடியும். இந்த அறிவிப்பை முதன் முதலாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.