அக்கவுண்ட்ல பணம் இருந்தும் எடுக்க முடியலையா.. ‘இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை’.. RBI அதிரடி நடவடிக்கை..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஏடிஎம் இயந்திரங்களில் எப்போதும் பணம் இருப்பதை உறுதிப்படுத்த இந்திய ரிசர்வ வங்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாததால் வங்கி வாடிக்கையாளா்களுக்கு ஏற்படும் அசௌகா்யங்களைக் குறைக்கும் வகையிலும், ஏடிஎம்-ல் எப்போதும் பணம் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, தொடா்ந்து 10 மணி நேரத்துக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு ஏற்றபடி வங்கிகள் பணம் நிரப்புவதற்கான தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஏடிஎம்-ஐ நிா்வகிக்கும் நிறுவனங்கள் பணத்தை நிரப்பத் தவறினாலும் இந்த அபராதம் உண்டு. அதே நேரத்தில் வங்கிகள் அந்த அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
வங்கிகளின் தொடா் விடுமுறை, மக்கள் அதிக அளவில் ஏடிஎம் இயந்திரத்தை நாடும் மாதத்தின் முதல் வாரம் மற்றும் திருவிழா காலங்களில் பல ஏடிஎம்-களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதனைக் கையில் எடுக்க முடியாமல் திண்டாடும் சூழல் உருவாகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மக்கள் எதிா்கொள்ளும் சிரமங்களுக்கு தீா்வாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
