விமானம் எங்கே போனது? பறக்க தொடங்கிய சில நொடிகளில்.. மாயமாக மறைந்த போர் விமானம்
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பான்: ஜப்பானில் போர் விமானம் காணாமல் போய் உள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் விமான விபத்துகள்:
நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. மோசமான வானிலை காரணமாக விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்ட வானூர்திகள் காணமல் போவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் 1947-ம் ஆண்டு காணமல் போன ஒரு அமெரிக்க விமானம் இமயமலைப் பகுதியில் கிடைத்துள்ளது. இதுபோன்று காணமல் போய் எந்த தகவலும் தெரியாமல் இருக்கும் மர்ம விபத்துகள் ஏராளம்.
விமானப் படை முகாமில் இருந்து விமான புறப்பட்ட போர் விமானம்:
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் ஜப்பானிய விமான சுய பாதுகாப்பு படைக்கு சொந்தமான எஃப்-15 ரக விமானம் காணாமல் போய் உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. இஷிகாவா மாகாணத்தில் அமைந்துள்ள கோமட்சூ விமானப் படை முகாமில் இருந்து விமான புறப்பட்ட விமானம் தான் மாயமாக மறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சில நொடிகளில் தகவல் துண்டிப்பு:
மேலும், விமானம் புறப்பட்டு சில நொடிகளில் அதனுடனான தகவல் துண்டிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் காணாமல் போன விமானத்தில் இரண்டு விமானப் படையினர் பயணித்தாகவும் கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
விமானம் ஜப்பானில் இருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் கடல் பகுதியை நோக்கி பறந்துக் கொண்டிருந்ததாகவும், அதன் பின் விமானத்திற்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படாத நிலை ஏற்படுத்துள்ளது.
இந்த நிலையில் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கரையோர பாதுகாப்பு படையின் சில படகுகள், விமானத்திடம் இருந்து இறுதியாக தொடர்புகள் கிடைத்த கடல் எல்லை நோக்கி புறப்பட்டு சென்று தேடுதல்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.