'பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல் முன்னாடி இப்படி ஒரு போஸ்டரா'... 'ஆவேசமான நபர்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் சுவரொட்டிகளை நகைக்கடை ஊழியர் ஒருவர் கிழித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தேர்முட்டி பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் எதிரே உள்ள சுவரில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. ஆபாசமாக இருந்த அந்த சுவரொட்டிகளை அந்த வழியாகச் சென்ற நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் தினேஷ் என்பவர் பார்த்து ஆவேசமடைந்தார். உடனே அங்குச் சென்று அந்த சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தார்.
தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் இரண்டாம் குத்து திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரை பார்த்த பலரும் கடும் கண்டன்களைத் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், இரண்டாம் குத்து திரைப்படம் குறித்து கோவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை நகைக் கடை ஊழியர் ஒருவர் கிழித்தெறியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
