"எங்க மக இன்னும் சாகல".. இறந்தும் 9 பேர் உயிரை காத்த மாணவி.. மனதை ரணமாக்கும் சோகம்.. உருக்க பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகாவில் உள்ள சோமனஹள்ளி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமிபாய்.

இந்த தம்பதியின் மகளான ரக்ஷிதா, சிக்கமகளூருவில் அமைந்துள்ள பசவனஹள்ளிவின் பி.யூ கல்லூரியில் படித்து வந்துள்ளார். அந்த கல்லூரியின் விடுதியில் நின்று ரக்ஷிதா தங்கி படித்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கல்லூரிக்கு செல்ல அங்கே வந்த பேருந்தில் ரக்ஷிதா ஏற முயன்றுள்ளார். அப்போது, அவர் ஏறுவதற்குள், பேருந்தை ஓட்டுநர் எடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், கால் தவறி பேருந்தில் இருந்து தவறி விழுந்த ரக்ஷிதா, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி ரக்ஷிதா மூளைச்சாவு அடைந்தார்.
மகளின் இறப்பு, பெற்றோர்களான சுரேஷ் மற்றும் லட்சுமி ஆகியோரை உச்சகட்ட வேதனையில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த மகளின் உடல், உறுப்புகளை தானம் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்த நிலையில், மாணவி ரக்ஷிதாவின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கவும் மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து, இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 9 உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இதில் இதயம் பெங்களூருவுக்கும், மற்ற உறுப்புகள் மணிபால் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, மொத்தம் 9 பேர் மறுவாழ்வு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், ரக்ஷிதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலை ரக்ஷிதா படித்த கல்லூரிக்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மாணவ மாணவிகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அடுத்ததாக, ரக்ஷிதாவின் உடல், அவரது சொந்த ஊரான சோமனஹள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மாணவி ரக்ஷிதா உயிரிழந்து 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளதை நினைத்து அவரது பெற்றோர்கள் மற்றும் அவருடன் படித்த மாணவ மாணவிகள் பெருமைப்படுவதாக கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளனர்.
Also Read | "அட, இது தான்'ங்க அந்த உற்சாக Announcement".. தோனி உடைத்த சீக்ரெட்.. "தல சொன்னது நிஜமா நடந்துருமா??"

மற்ற செய்திகள்
