59 வயதில் விவாகரத்து கேட்ட தம்பதி.. 69 வயதில் மீண்டும் இணைந்த சுவாரஸ்யம்!!.. நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Nov 17, 2022 02:39 PM

திருமணம் என்பது இருவரின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கக் கூடிய ஒரு இடமாகும். மேலும், இந்த திருமண வாழ்வை நாம் தொடங்கி செல்லும் வழியில் ஏராளமான தடைகள் கூட வரலாம்.

karnataka couple applied for divorce reunited after 10 years

Also Read | "நம்மூருல பொண்ணு பாக்கலாம்னா கேக்குறியா மணியா.‌?, 25 ஏக்கர் கேக்குறாங்க".. வரன் பார்க்க போன இடத்தில் புலம்பும் இளைஞர்.. வைரல் வீடியோ

சிலர் அதனை கடந்து முன்னேறி சென்று கொண்டே இருந்தாலும், மறுபக்கம் கணவன் மனைவி இடையே உறவில் ஏதாவது பெரிய சிக்கல் கூட உருவாகும். அப்படி ஒரு சூழலில் பிரிந்து வாழவும் முடிவு செய்யும் தம்பதிகள், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுவார்கள்.

அதில் வரும் தீர்ப்புக்கு அனுசரித்து தங்கள் வாழ்க்கையை முன் நகர்த்தி செல்லவும் முடிவு எடுப்பார்கள். அப்படி ஒரு சூழலில், 59 வயதில் விவாகரத்துக்கு ஒருவர் விண்ணப்பித்திருந்த நிலையில், 69 வயதில் மீண்டும் மனைவியுடன் இணைந்துள்ள விஷயம் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

karnataka couple applied for divorce reunited after 10 years

கர்நாடக மாநிலம், தும்கூர் என்னும் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 59 ஆவது வயதில் தனக்கு விவாகரத்து வேண்டும் வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனைவியுடன் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் நடந்து வந்ததால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மறுபக்கம், அந்த நபரின் மனைவியும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த முதியவருக்கு தற்போது 69 வயதாகும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவாகரத்து வழக்கினை மீண்டும் தற்போது விசாரிக்கப்பட்டது. அப்போது இரண்டு பேரிடமும் கவுன்சலிங் நடத்திய நீதிபதி, அவர்களிடம் பல விஷயங்களை எடுத்துக் கூறி, சேர்ந்து வாழ்தலின் முயக்கியத்துவதை பற்ற பேசியதாகவும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில், 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து தாக்கல் செய்திருந்த தம்பதி, 69 ஆவது வயதில் மீண்டும் இணைந்தனர்.

karnataka couple applied for divorce reunited after 10 years

மேலும், சேர்ந்து வாழ்கிறோம் என அந்த தம்பதி விருப்பம் தெரிவித்ததால், நீதிமன்ற வழக்கை ரத்து செய்தது. தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் மாலை மாற்றி மீண்டும் இணைந்து கொண்டனர். வயதான இந்த தம்பதியை போலவே விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்த இன்னும் 4 தம்பதிகளின் வழக்கு நிலுவையில் இருந்தது. அந்த இணைந்து வாழ சம்மதம் தெரிவித்ததால் விவாகரத்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கும் நீதிமன்ற வளாகத்திலேயே மாலை மாற்றி இணைந்து வாழ முடிவு செய்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பார்ப்போர் பலரும் மனம் நெகிழ்ந்து போயுள்ளனர்.

Also Read | "என்ன கேமரால காட்டுவீங்களா இல்லையா?".. சீரியஸா பேசிட்டு இருந்த செய்தியாளர்.. குட்டி யானை க்யூட்டா செஞ்ச விஷயம்.. வைரல் வீடியோ!!

Tags : #KARNATAKA #KARNATAKA COUPLE #DIVORCE #REUNIT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka couple applied for divorce reunited after 10 years | India News.