கரண்ட் கம்பியில் சிக்கிய கைக்குட்டை.. விபரீத முயற்சியில் இறங்கிய நபர்.. அடுத்த வினாடியே நடந்த பெரும் சோகம்..!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் மின்சார கம்பியில் விழுந்த கைக்குட்டையை எடுக்க சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Also Read | தெலுங்கானாவில் திம்சா நடனமாடிய ராகுல் காந்தி.. அசந்துபோன பொதுமக்கள்.. வீடியோ..!
கர்நாடக மாநிலம் உதயகிரி பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மல்லப்பா வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது வீட்டில் உள்ள பால்கனிக்கு சென்ற அவர் அருகில் இருந்த மின்சார கம்பியில் தனது கைக்குட்டை கிடப்பதை பார்த்திருக்கிறார்.
கம்பியில் சிக்கி இருந்த கைக்குட்டையை எடுக்க அவர் முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருக்கு கைக்குட்டை எட்டவில்லை. இதனால் என்ன செய்வதென்று யோசித்த மல்லப்பா வீட்டுக்குள் சென்று ஒட்டடை குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றிருக்கிறார். கம்பியில் சிக்கி இருந்த கைக்குட்டையை ஓட்டடை குச்சி மூலம் எடுக்க முயற்சித்திருக்கிறார் மல்லப்பா.
கையில் துணி ஒன்றை சுற்றிக்கொண்டு ஒட்டடை குச்சி மூலமாக, கைக்குட்டையை எடுக்க அவர் முயற்சிக்க அப்போது துரதிருஷ்டவசமாக உலோகத்தால் ஆன ஒட்டடை குச்சி கரண்ட் கம்பியில் மோதி இருக்கிறது. இதனால் மல்லப்பா மீது மின்சாரம் பாய்ந்து அவர் அப்படியே சரிந்து விழுந்திருக்கிறார். இதனிடையே சத்தம் கேட்டு பால்கனிக்கு ஓடிவந்த மல்லப்பாவின் குடும்பத்தினர், அவரது நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மின்சாரம் தாக்கியதால் மல்லப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் இதுகுறித்து குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் மல்லப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனையடுத்து இதுகுறித்த விசாரணையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
மின்சார கம்பியில் விழுந்த கைக்குட்டையை எடுக்க சென்று மின்சாரம் தாக்கி மல்லப்பா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
