ரெயில்வே டிக்கெட் மாதிரியே 'கல்யாண' அழைப்பிதழ்.. இதுல PNR நம்பர் இதுவா..? வேற லெவல்.‌

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Oct 26, 2022 01:45 PM

இன்றைய காலகட்டத்தில், திருமண நிகழ்வு என்பது மிகப் பெரிய ஒரு கொண்டாட்டமாக தான் பார்க்கப்படுகிறது.

new marriage invitation in railway ticket model gone viral

Also Read | "காசு இல்லைன்னாலும்.. நான் இருக்கேன்".. காலணி தைப்பவரை நெகிழ வைத்த உணவு விற்பனையாளர்.. வீடியோ..!

மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது.

அப்படி ஒரு நாளை வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள்.

இதற்காக, இன்றைய காலத்தில், திருமணத்திற்கு முன்பே எடுக்கப்படும் போட்டோஷூட் தொடங்கி, திருமண பத்திரிக்கை என அனைத்திலுமே ஏதாவது ஒரு புதுமையை அவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அடிக்கடி நடைபெறும் வித்தியாசமான திருமண போட்டோசூட் தொடர்பான புகைப்படங்கள் ஏராளம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

new marriage invitation in railway ticket model gone viral

அதே போல தான், திருமண அழைப்பிதழில் கூட சாதாரணமான கார்டாக இல்லாமல், விமான டிக்கெட் வடிவில், ரேஷன் கார்டு வடிவில் என வித விதமாக டிசைன் செய்து அச்சிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ரெயில்வே டிக்கெட் வடிவில் திருமண பத்திரிகை அச்சிடப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சோமசுந்தரம் மற்றும் சௌமியா என்ற ஜோடி, வரும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, தங்களின் திருமண அழைப்பிதிழை ரயில்வே டிக்கெட் வடிவில் அவர்கள் தயார் செய்துள்ளனர். திருச்சிராப்பள்ளி முதல் திருநெல்வேலி வரை ரெயில் பயணம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ராக்ஃபோர்ட் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. PNR நம்பர் இருக்கும் இடத்தில் கூட, மொபைல் எண் வடிவில் தான் இருப்பது போல தெரிகிறது.

new marriage invitation in railway ticket model gone viral

இது தவிர, திருமண தேதி மற்றும் மண்டபம் தொடர்பான விவரங்களும் ரெயில்வே டிக்கெட் வடிவிலேயே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. "Coiuple Railway" என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள், மக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | "அவரு டி 20ல இருந்து Retire ஆகணும், ஏன்னா".. கோலி பத்தி அக்தர் சொன்ன விஷயம்!!

Tags : #KARNATAKA #MARRIAGE #MARRIAGE INVITATION #MARRIAGE INVITATION IN RAILWAY TICKET MODEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. New marriage invitation in railway ticket model gone viral | India News.