"நீங்க வந்தா மட்டும் போதும்".. குடியேறும் மக்களுக்கு ₹25 லட்சம் கொடுக்க ரெடியாக இருக்கும் நாடு..?? கல்யாணமே செஞ்சு வைக்கிறாங்களா..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Nov 25, 2022 01:19 PM

தங்களது நாட்டில் குடியேறும் வெளிநாட்டவருக்கு லட்ச கணக்கில் பணம் கொடுப்பதாக இத்தாலி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறது.

Is this Italian town pays people 30000USD

Also Read | ஜாம்பவான் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்.. மேட்ச் முடிஞ்சதும் வீரர்கள் செஞ்ச அடடே காரியம்.. FIFA பாராட்டு..!

ஐரோப்பாவில் அமைந்துள்ள அழகிய நாடு இத்தாலி. இந்நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ளது பிரேஸிஸி (Presicce) என்னும் சிறிய நகரம். இங்கே வாழ்ந்துவந்த மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டதால் இங்குள்ள பெரும்பாலான வீடுகள் காலியாக கிடப்பதாக சொல்லப்படுகிறது. பழங்கால கட்டிடங்களும், வானுயர்ந்த தேவாலயங்களை கொண்ட Presicce யில்  மக்களை குடியேற செய்வதன் பொருட்டு அந்நாடு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Is this Italian town pays people 30000USD

அதன்படி, Presicce -யில் நிரந்தரமாக குடியேறும் மக்களுக்கு 30,000 யூரோக்கள் (சுமார் 25 லட்ச ரூபாய்) வழங்கப்பட இருப்பதாக உள்ளூர் அரசு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம், தங்களது நகரத்தில் மக்கள்தொகையை அதிகரிக்கவும், நகரத்தை மீண்டும் பொலிவுற செய்யவும் முடிவெடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Is this Italian town pays people 30000USD

இதுகுறித்து CNN ஊடகத்திடம் பேசிய உள்ளூர் கவுன்சிலர் ஆல்ஃபிரடோ பலீஸ்," 1991 க்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்று மையத்தில் கூட பல காலி வீடுகள் உள்ளன. அவை புதிய குடியிருப்பாளர்களுடன் மீண்டும் உயிர்ப்புடன் காண விரும்புகிறோம். வரலாறு, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் கலைகள் நிறைந்த எங்களது பகுதிகள் மெல்ல மெல்ல காலியாகி வருவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. இங்கு உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் ஒன்றை வாங்க விரும்பும் மக்களுக்கு நாங்கள் 30,000 யூரோக்கள் வரை வழங்குவோம். மொத்த நிதி இரண்டாகப் பிரிக்கப்படும்: இது ஓரளவு பழைய வீட்டை வாங்குவதற்கும், ஓரளவு மறுசீரமைப்பதற்கும் போதுமானதாக இருக்கும்" என்கிறார். இதுகுறித்த விண்ணப்பங்கள் வரும் வாரங்களில் வினியோகிக்கப்படும் எனவும் பலீஸ் சொல்லியிருக்கிறார்.

Is this Italian town pays people 30000USD

இதேபோல, இத்தாலியின் லாசியோ நகரத்தில் மக்களை குடியமர்த்த இன்னும் வித்தியாசமான முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது. இங்கு வழக்கமாக அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். கொரோனா காரணமாக இப்பகுதிக்கு மக்கள் செய்வது குறைந்துவிட்டதால் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். அதாவது, இங்கே திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு 1.67 லட்ச ரூபாயை அளிக்க அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறதாம். இணைவாசிகள் இப்போது இத்தாலியின் இந்த அறிவிப்பு பற்றித்தான் பேசிவருகின்றனர்.

Also Read | "கடுமையான தண்டனை கிடைக்கணும்".. நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி..!

Tags : #ITALIAN #ITALIAN TOWN #PAYS #PEOPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Is this Italian town pays people 30000USD | World News.