“பாரதியின் புதுமைப் பெண்கள்” .. BIGG BOSS -ல் ஆட்சியர் கவிதா ராமு & SP வந்திதாவை வாழ்த்திய கமல் - முழு விபரம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 03, 2023 12:28 PM

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். 

Kamal Praises Kavitha Ramu IAS and SP Vandita in Bigg Boss

Also Read | "என் வாழ்க்கைல கெடச்ச மிகப் பெரிய பரிசு".. 9 வருஷம் கழிச்சு கெடச்ச மனைவி.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த கணவன்!!

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததால் பொது மக்கள் சந்தேகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த சிலர் நீர் தேக்க தொட்டி மேலே ஏறி பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் தொட்டியினுள் மனித கழிவுகளை கொட்டியது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த தொட்டியை ஆய்வு செய்ததில் நீரில் கழிவுகள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையம் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் இது தொடர்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்தின் இறுதியில், பேசிய நடிகர் கமல்ஹாசன், இந்த விசயம் குறித்து விளக்கியதுடன், “வேங்கைவயல் பகுதியில் 3 தலைமுறைகளாக தாங்கள் வணங்கும் தெய்வத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தில் பிரவேசிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களை சென்று வழிபட்டனர்.

காந்தியாரும் பெரியாரும் என்றோ செய்த ஆலய நுழைவு பிரவேசங்களை இன்றும் செய்ய வேண்டிய அவல சூழல் உள்ளது. எனினும் இவற்றை செய்து முடித்த ஆட்சியர் கவிதா ராமுவுக்கும், காவல் துறை கண்காணிப்பாளர் வந்திதாவுக்கும் நன்றி. இன்னும் கவிதா ராமு, வந்திதா போன்ற பாரதியின் புதுமைப் பெண்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை உண்டாகியுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இவ்வருடத்தின் கடைசி நாளில் (டிசம்பர் 31, 2022) இனி இதுபோன்று நடக்காமல் இருக்க நாம் சத்திய உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "பாஜகவில் இருந்து விலகுகிறேன்".. பரபரப்பு முடிவை எடுத்த காயத்ரி ரகுராம்!!..

Tags : #KAMAL #KAVITHA RAMU IAS #SP VANDITA #BIGG BOSS #PUDUKOTTAI ISSUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamal Praises Kavitha Ramu IAS and SP Vandita in Bigg Boss | Tamil Nadu News.