BIGG BOSS TAMIL : "இருக்குற வரை இருப்பேன்..".. குடும்பத்தை நினைத்து கேமரா முன் கலங்கிய GP முத்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் வீட்டினுள் உள்ள கேமராவில் தனது குடும்பத்தினரிடம் பேசியபடியே GP முத்து கண்கலங்கியிருக்கிறார்.

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
முன்னதாக இந்த சீஸனின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட GP முத்து தனது குடும்பத்தினரிடம் பேசும்போது கண்கலங்கிவிடுகிறார். எப்போதும் கலகலப்பாக வலம்வரும் GP முத்து, சக போட்டியாளர்களிடமும் ஜாலியாகவே உரையாடி வருகிறார்.
அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்நிலையில், GP முத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவில் தனது குடும்பத்தினருடன் உருக்கமாக பேசியிருக்கிறார். அப்போது,"உங்களையெல்லாம் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அப்பப்போ பேசணும்னு நெனைக்கிறேன். ஆனா ஆளுங்களாம் இருக்காங்க. எனக்கு அழுகையா வருது. அழக்கூடாதுன்னு நெனச்சிட்டு இருக்கேன். ஓப்பனா சொல்லனும்னா இருக்க வரைதான் இருப்பேன். உங்களை எல்லாம் தேடுது. மூச்சுமுட்டுற மாதிரி இருக்கு. வீட்டுல ஜாலியா தான் இருக்கு. எல்லாரும் பாசமா இருக்காங்க. ஆனா குடும்பத்தை விட்டு நான் இப்படி இருந்தது கிடையாது. இன்னைக்கு முழுசும் உங்க நினைப்புதான்" என கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
மேலும், தனது குழந்தைகளிடம் அம்மாவை பார்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை வைத்திருக்கிறார் GP முத்து. எப்போதும் கலகலப்பாக இருக்கும் GP முத்து குடும்பத்தினரை நினைத்து கலகலங்கியது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thalaivan wants to Meet His Family ❤️❤️❤️ Missing His Family ❤️ Dei #GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss pic.twitter.com/f6ZyEF9A5n
— GP Muthu Army (@drkuttysiva) October 17, 2022

மற்ற செய்திகள்
