JUDGE தனலட்சுமியால கூட சிரிப்பை அடக்க முடியல..😂விழுந்து விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்.. அப்டி யார் CASEபா அது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது.
அந்த வகையில், கோர்ட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.
முன்னதாக பொம்மை டாஸ்க் மற்றும் ஃபேக்டரி டாஸ்க் இடையே பல குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி இருந்தது. இதன் பெயரில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் இடையே கூட சண்டை வெடித்து கலவரத்தையே பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கி விட்டது. இதே போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க் இடையே கூட அசீம் மற்றும் விக்ரமன் மோதிக் கொண்டது உள்ளிட்ட பல சலசலப்பு சம்பவங்கள் நடந்திருந்தது.
டாஸ்க் என்று வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர். ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.
நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் Open நாமினேஷனாக இருந்தது. சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். அதன்படி, பலரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் பெயரை அறிவித்திருந்தனர்.
புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொரு வழக்கும் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் உள்ளது. இதற்கு மத்தியில் சில காரசாரமான விவாதங்கள் கூட அரங்கேறி தான் வருகிறது. இதற்கு மத்தியில் கலகலப்பாக நடந்த விஷயம் ஒன்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
தனலட்சுமி நீதிபதியாக அமர்ந்திருக்க ராம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் தொடர்பான வழக்கு நடைபெறுவதாகவும் தெரிகிறது. மேலும் இதில் அமுதவாணன் மீது உடை அடிப்படையில் வேடிக்கையாக சில விஷயங்கள் சொன்னதாக வழக்கு ஒன்றை ராம் தொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ராமின் வழக்கறிஞராக ADK வும், அமுதவணனின் வழக்கறிஞராக மைனா நந்தினியும் செயல்படுகின்றனர். அப்போது அமுதவாணனை விசாரிக்கும் ADK, ராமின் உடை குறித்து கிண்டலாக பாடிய பாட்டை பாடி அதற்கான காரணம் குறித்தும் அமுதாவணனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். சற்று ஜாலியான வழக்காகவே இது பார்க்கப்படும் நிலையில் அங்கே இருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் நீதிமன்றம் என்பதால் மறைந்து இருந்தும் சிரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இதனைக் கண்டதும் கோர்ட்டை அவமதிப்பதாக ADK கூற, "இங்கே இருப்பவர்கள் யாராவது சிரித்தால் தயவு செய்து எழுந்து வெளியே போலாம்" என்றும் நீதிபதி தனலட்சுமி குறிப்பிடுகிறார். ஆனால் இந்த வழக்கு நடந்த சமயத்தில் நடுவே தனலட்சுமி கூட சிரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.