"ஓவியா கூட ஒருபடம் நடிச்சாச்சா.?".. GP முத்து சொல்லிய தகவல்.. ஆகா இதுதான் கேரக்டரா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓவியாவுடன் ஒரு படத்தில் நடித்திருப்பதாக GP முத்து சக போட்டியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், அதில் தனது கதாப்பாத்திரம் குறித்தும் அவர் சூசகமாக கூறியுள்ளார்.

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் உள்ள கார்டன் பகுதியில் கதிரவன், மைனா மற்றும் வெங்கட் ஆகியோருடன் GP முத்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சினிமாவில் நடிப்பது பற்றி போட்டியாளர்கள் பேச, தான் நடிகை ஓவியாவுடன் ஒரு படத்தில் நடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் GP முத்து. அப்போது "அவங்கதான் ஜோடியா?" என கதிரவன் கேட்க, அதனை மறுத்திருக்கிறார் முத்து. மேலும், தன்னுடைய காதாப்பாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும் எனவும் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் GP முத்து. பேச்சினிடையே உங்களுக்கும் அவங்களுக்கும் காம்பினேஷன் வருதா அண்ணா? என மைனா கேட்க, ஆமாம் என்கிறார் GP முத்து.
கலகலப்பான பேச்சுக்கும், வேடிக்கையான நடவடிக்கைகளுக்கும் பெயர்போன GP முத்து ஓவியாவுடன் படத்தில் நடித்திருப்பதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே வைரலாக பேசப்பட்டு வருகிறது.
Thalaiver Acted a Movie With Oviya 🔥🔥🔥#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/TK7LzwPUCm
— GP Muthu Army (@drkuttysiva) October 17, 2022
Also Read | Bigg Boss Tamil : "இருக்குற வரை இருப்பேன்..".. குடும்பத்தை நினைத்து கேமரா முன் கலங்கிய GP முத்து..!

மற்ற செய்திகள்
