Tiruchitrambalam D Logo Top

பிரபல நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. "இதுக்கு பின்னாடி சதித் திட்டம் இருக்கு".. பரபரப்பை கிளப்பிய சகோதரி

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 23, 2022 08:04 PM

பாஜகவை சேர்ந்தவரும், பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவருமான சோனாலி போகட் திடீரென மறைந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

politician and actress sonali phogat passed away

Also Read | நிலத்தடி'ல இருந்து 60 வருசமா புகையும் தீ.. "அந்த ஊருக்கு போக்குவரத்தையும் கட் பண்ணிட்டாங்க".. திகிலை உண்டு பண்ணும் பின்னணி!!

ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட், தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார்.

இதனைத் தொடர்ந்து, டிக்டாக் செயலி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சோனாலி போகட், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14 ஆவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார் சோனாலி. அது மட்டுமில்லாமல், பாஜக கட்சியில் இணைந்த சோனாலி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

politician and actress sonali phogat passed away

41 வயதாகும் நடிகை மற்றும் அரசியல்வாதியான சோனாலி போகட், கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சோனாலி ஏற்கனவே உயிரிழந்து போனதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோனாலியின் மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

politician and actress sonali phogat passed away

இதற்கு மத்தியில், சோனாலியின் மறைவில் சதித் திட்டம் இருப்பதாகவும், உணவு உண்டதற்கு முன், அசவுகரியம் ஏற்பட்டதாகவும் அவரது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். முன்னதாக, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சோனாலி கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய ஒரு சில மணி நேரங்களில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவரது மரணத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சோனாலியின் சகோதரி குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால், சோனாலியின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விஷயம் எதுவும் இல்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சோனாலியின் மறைவில் சந்தேகமான விஷயம் எதுவும் தென்படவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே என்ன விவரம் என்பது தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சோனாலியின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது சோனாலியும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சோனாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடைசியாக பகிர்ந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் உருக்கத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | "ஈ தொல்லையால் அல்லல்படுறோம்.. ஒரு டீ கூட குடிக்க முடியல".. தமிழ்நாட்டுல 'ஈ'ப்படி ஒரு கிராமமா?

Tags : #BJP #SONALI PHOGAT #POLITICIAN AND ACTRESS SONALI PHOGAT #SONALI PHOGAT PASSED AWAY #BJP LEADER SONALI PHOGAT #BIGG BOSS #BIGG BOSS SONALI PHOGAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Politician and actress sonali phogat passed away | India News.