BIGG BOSS 6 TAMIL : "எல்லாரையும் சிரிக்க வெப்பேன்.. ஆனா கண்ணு கலங்குது!" - ஹவுஸ்மேட்ஸ் இதயம் வென்ற அமுதவாணன்.. கமல் முன் நெகிழ்ச்சி ..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்குள் ஒருவாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து வீட்டு வேலைகளை பிரித்து செய்தனர். இவர்களுக்குள் 40வது நாள் நடக்கவேண்டிய சண்டை, சச்சரவுகள், புரிதல் பிரச்சனைகள், உரசல்கள், நட்பு என அனைத்துமே இந்த ஒருவாரத்திலேயே காண முடிந்தது. இந்த நிலையில் வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பேசினார்.
அதன் ஒரு அங்கமாக, பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த நபர் போல் இன்னும் பல பேர் இருந்திருந்தால் பிக் பாஸ் வீடு நல்லா இருந்திருக்கும் என்று நினைக்கக்கூடிய ஒரு ஹவுஸ் மேட்டை மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் அநேகமானோர் ஜிபி முத்துவையும் அமுதவாணனையும் தேர்ந்தெடுத்தனர். இதில் அதிக வாக்குகளை பெற்றவர் அமுதவாணன்தான்.
அவர் குறித்து பேசும்போது அனைவருமே, “அமுதவாணன் இந்த வீட்டை கலகலவென்று வைத்திருப்பார். எப்போதும் மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். மிகவும் ஜாலியாக இருப்பார். அவரைப் போன்று இன்னும் பலர் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று குறிப்பிட்டு, அவர் கையில் ஸ்டார் கொடுத்தனர். இறுதியில் இது பற்றி பேசிய அமுதவாணன், தனக்கு கண்கள் கலங்குவதாக குறிப்பிட்டார். மேலும், “எந்த இடத்துக்கு போனாலும் நான் அனைவரையும் சிரிக்க வைப்பேன். எனக்கு அது ஒன்று தான் தெரியும்” என்று நெகழ்ந்து பேசினார்.

மற்ற செய்திகள்
