'சேர்ந்து மது அருந்தியபோது திடீரென'... 'போதையில் மனைவி செய்த பகீர் காரியம்'... 'பதறியடித்து ஓடிவந்த பிள்ளைகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் மதுபோதையில் இருந்த மனைவி கணவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி விஷால் தேவன் (42) - சபினா ரோஷன் (50). விஷால் தேவன் ராணுவத்தில் லெப்டினனட் கர்னலாக பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றவர். சபினா ரோஷன் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், சபினாவிற்கு முதல் கணவரின் மூலம் ஒரு பெண் குழந்தையம், விஷாலுடனான திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இதையடுத்து இந்த தம்பதி மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ள சூழலில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்படுவதும், ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொள்வதும் நிகழ்ந்து வந்துள்ளது. கடந்த மாதம் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் சபினாவின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டபோதும், அவரை விஷால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் கணவன் மனைவி இருவரும் மது பழக்கம் கொண்டவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல இருவரும் அமர்ந்து மது அருந்தியபோது, இருவருக்கும் இடையே பண பிரச்சினை மற்றும் சில குடும்ப பிரச்சனைகள் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது வழக்கமாக நடக்கும் சண்டை என அவர்களுடைய பிள்ளைகள் கண்டுகொள்ளாத நிலையில், அதிக மது போதையிலும், ஆத்திரத்திலும் இருந்த சபினா இறைச்சி வெட்டும் கத்தியை வைத்து கணவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விஷாலின் அலறல் சத்தம் கேட்டு வந்த பிள்ளைகள் தந்தை இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்துபோய் அக்கம் பக்கத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க, அவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருடைய உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மனைவி சபினாவை கைது செய்துள்ள அவர்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
