சுஷாந்த் சிங் தங்கை மீது நடிகை ரியா 'பாலியல்' புகார்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தங்கை பிரியங்கா மீதும், டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் தருண் குமார் மீதும் நடிகை ரியா சக்ரபோர்த்தி காவல்துறையிடம் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரண வழக்கில், நடிகை ரியா முதல் குற்றவாளியாக கருதப்படுகிறார். மேலும், அவர் தான், தனது மகனை கொலை செய்ததாக சுஷாந்தின் தந்தையும், குடும்பத்தினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, சுஷாந்த் சிங்கின் தங்கை பிரியங்கா மீதும், மருத்துவர் தருண் குமார் மீதும் மும்பை போலீசிடம் நடிகை ரியா புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2019ம் ஆண்டு, பிரியங்கா சிங் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பிரியங்கா சிங் என் உடலை தவறான எண்ணத்தில் சீண்ட ஆரம்பித்தார். பின்னர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, உறவு வைத்து கொள்ள வற்புறுத்தினார்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்
