'மொதல்ல வீட்ட விட்டு வெளிய போ...' '70 வயசு பாட்டியை பல நாள் திட்டம் போட்டு...' - இளைஞர் செய்த உச்சக்கட்ட கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையை சேர்ந்த இளைஞர் 70 வயது பாட்டியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருகானை கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான கார்த்தி பாண்டி என்னும் இளைஞர், அதேப்பகுதியை சேர்ந்த 70 வயது பாட்டியின் வீட்டுக்குள் சென்று தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
கார்த்தி பாண்டி என்னும் இளைஞர் சமீபகாலமாகவே அப்பகுதியில் தனியே இருக்கும் 70 வயது பாட்டியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளார். இதனிடையே தன்னுடைய நீண்டகால திட்டத்தை நிறைவேற்ற கார்த்தி பாண்டி சம்பவத்தன்று இரவு, பாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். கார்த்தியின் எதிர்பாராத வரவை பார்த்த பாட்டி அவரை வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் கோபமடைந்த இளைஞர் கார்த்தி, மூதாட்டியை தகாத வார்த்தைகளில் திட்டி அவருக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இளைஞர் கார்த்தியின் செயல்களை தடுக்க முடியாத மூதாட்டி, மறுநாள் காலை நடந்தவற்றை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக பக்கத்து வீட்டாரின் உதவியுடன் தனக்கு நடந்த சம்பவம் குறித்து, ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மூதாட்டி அளித்த புகாரின் பெயரில், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய கார்த்திக் பாண்டியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
