'ரியா அளித்துள்ள திடீர் புகாரால் பரபரப்பு'... 'சுஷாந்த் வழக்கில்'... 'புதிய திருப்பமாக வெளியாகியுள்ள வாட்ஸ்அப் உரையாடல்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 07, 2020 06:02 PM

சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக அவருடைய சகோதரி மற்றும் டெல்லி மருத்துவமனை டாக்டர் ஆகியோர் மீது ரியா சக்ரவர்த்தி புகார் கொடுத்துள்ளார்.

Sushant Case Drug Angle Rhea Files Case Against His Sister

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் பண மோசடியில் ஈடுபட்டது போன்ற குற்றசாட்டுகளைக் கூறி  அவருடைய காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போதைப்பொருள் கோணத்திலும் நடத்தப்பட்ட விசாரணையில், ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரும் (என்சிபி) ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் ரியாவின் சகோதரர் ஷோயிக், மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டு என்சிபி காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அவர் நேற்றும் இன்றும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் புதிய திருப்பமாக ரியா சக்கரவர்த்தி மும்பை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சுஷாந்தின் சகோதரி பிரியங்கா மற்றும் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனை டாக்டர் தருண் குமார் ஆகியோர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தப் புகாரில், "டாக்டர் தருண் குமார் கொடுத்த மருந்து குறிப்பை பிரியங்கா சுஷாந்திற்கு அனுப்பியுள்ளார். எந்த ஆலோசனையும் இல்லாமல் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை சுஷாந்திற்கு அவர் பரிந்துரைத்துள்ளார். டாக்டர் பரிந்துரைத்த மருந்து, டெலிமெடிசின் பயிற்சி வழிகாட்டுதல்கள் 2020ன் கீழ் மின்னணு முறையில் பரிந்துரைக்க தடை செய்யப்பட்டது. மேலும் அந்த சட்டவிரோத மருந்தைப் பெற்ற 5 நாட்களுக்குள் சுஷாந்த் இறந்துள்ளார்.

பிரியங்கா சிங், டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனை டாக்டர் தருண் குமார் மற்றும் சிலருடைய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம். அத்துடன் இதுபோன்ற போலியான மற்றும் சட்டவிரோதமான மருந்துகளை வழங்க அவர்கள் எவ்வாறு முன்வந்தார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். சுஷாந்த் சிங் ஜூன் 8ஆம் தேதி மும்பையில் இருந்தபோது டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் புறநோயாளியாக வந்ததுபோன்று காட்டி, போலியாக மருந்துகளை பரிந்துரை செய்திருக்கிறார்கள்" என ரியா கூறியுள்ளார். சுஷாந்த் சிங் இறந்ததற்கு 6 நாட்களுக்கு முன்னர், ஜூன் 8 தேதி அவருக்கும் அவருடைய சகோதரிக்கும் இடையிலான வாட்ஸ்அப் உரையாடல்களை அடிப்படையாக வைத்து இந்த புகாரை ரியா கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sushant Case Drug Angle Rhea Files Case Against His Sister | India News.