'ஒன் சைடாக லவ்' பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்... காதலை வெளிப்படுத்திய இளைஞன்!.. குடும்பமே சேர்ந்து... நெஞ்சை பதபதைக்க வைக்கும் அசாத்திய வன்முறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 07, 2020 04:38 PM

16 வயது சிறுமிக்கு காதல் தொந்தரவு கொடுத்த இளைஞரை சிறுமியின் குடும்பமே சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்தக் கொலை வழக்கில், பெற்றோர், சிறுமி அவரது அண்ணன் என 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

chidambaram extreme crime boy who stalked a girl killed

சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் 21 வயது அன்பழகன். பைக் மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் கடை நடத்தி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை வழியில் அடிக்கடி சந்தித்து இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.

மாணவி நட்பாகப் பழகிய நிலையில், அன்பழகன் ஒருதலைக் காதலில் விழுந்தார். கொரோனா ஊரடங்கால், மாணவியின் வீட்டுப் பக்கம் அடிக்கடி சென்று வந்தார். இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர், அன்பழகனை எச்சரித்தனர். சிதம்பரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

போலீசார் அன்பழகனை எச்சரித்து அனுப்பிய நிலையிலும் காதல் தொந்தரவை அன்பழகன் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மீண்டும் மாணவியின் பெற்றோர் அன்பழனை எச்சரித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கடைக்கு சென்ற அன்பழகன் மாலை வரை வீடு திரும்பவில்லை.

அன்பழகனின் பெற்றோர் அவரது செல்போனுக்கு அழைக்க முயன்றபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து, மாணவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். போலீசார், விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 11 மணியளவில் அன்பழகன், அந்த மாணவியின் வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கு, மாணவியின் பெற்றோர் முன்னிலையில் தனது காதலை மாணவியிடம் வெளிப்படுத்தினார். அப்போது மாணவியின் பெற்றோர் மற்றும் 17 வயது அண்ணனுக்கும், அன்பழகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், மூவரும் சேர்ந்து அன்பழகனை கத்தியால் சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்தை அங்கிருந்து அகற்றுவதற்காக அவரது கைகளைக் கட்டியுள்ளனர். பின்னர் எப்படி அகற்றுவது எனத் தெரியாமல் செய்வதறியாது இருந்தனர். அப்போதுதான் அன்பழகனின் பெற்றோர், உறவினர்கள் வந்து பார்த்ததில் கொலை அம்பலமானது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர், அவரது அண்ணன், மற்றும் மாணவி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களைக் கண்காணிப்பதிலும் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மகளுக்கு காதல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பெற்றோரும் அண்ணனும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chidambaram extreme crime boy who stalked a girl killed | Tamil Nadu News.