'இங்கிலாந்து' பப்களில் 'வேலைபார்க்கும்' 3.5 மில்லியன் 'ஊழியர்கள்!'.. 'நீண்ட' நாட்களுக்கு பிறகு வெளியான 'மகிழ்ச்சி' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கேளிக்கை கூடங்கள் மற்றும் சொகுசு மதுபானக் கூடங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டன. இதனால் இதுபோன்ற இடங்களில் பணிபுரிந்த 3.5 மில்லியன் ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சியை இங்கிலாந்து சந்தித்துவருவதால், வரும் ஜூன் 22-ஆம் தேதி முதல் கேளிக்கை கூடங்கள் திறக்கப்படுவதற்கான கோரிக்கை எழுந்துள்ளதாகவும், இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, வரும் ஜூன் 22-ஆம் தேதி கேளிக்கை கூடங்களும், சொகுசு மதுபான கூடங்களும் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் 3.5 மில்லியன் ஊழியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
