ஒரே ஒரு 'தடவ'... அதுவும் அந்த 'மேட்ச்'ல சச்சின 'அவுட்' எடுத்தேன்... 'கொல' பண்ணிடுவேன்னு 'மிரட்டுனாங்க'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சினை அவுட் செய்த பின் தனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்ததாக இங்கிலாந்து பவுலர் டிம் பிரெஸ்னன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதில் இவரது 99 வது சதத்தை 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடித்திருந்தார். இதனால் அதன் பிறகு தனது 100 வது சதத்தை எப்போது அடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிதும் எதிர்பார்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் 90 ரன்களை கடந்தார். பொதுவாக சச்சின் 90 ரன்களை தாண்டினால் போட்டியைக் காணும் ரசிகர்களிடையே பதட்டம் தொற்றிக் கொள்ளும். இதையடுத்து அந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ரன்களில் இங்கிலாந்து பவுலர் டிம் பிரெஸ்னன் பந்து வீச்சில் எல்.பி. டபுள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் அது அவுட் இல்லை என கூறி அப்போது மிகப்பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் அந்த விக்கெட் குறித்து பவுலர் டிம் பிரெஸ்னன் தற்போது மனம் திறந்துள்ளார். 'சச்சினை அவுட் செய்த பிறகு எனக்கும் அந்த போட்டியின் நடுவராக இருந்து அவுட் கொடுத்த டக்கெருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தது. இதனால் நாங்கள் இருவரும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி காவல்துறையிடம் பாதுகாப்பிற்கு விண்ணப்பித்திருந்தோம்' என தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் 99 வது சதமடித்த சச்சின் டெண்டுல்கர், அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 100 வது சதமடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
