'தைரியமான ஆளா இருந்தா தனியா வா டா'... 'மோசமான பிளானில் சிக்கிய இளைஞர்'... 'பாதியில் பயந்து ஓடிய நண்பர்'... சென்னையை கதிகலங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 08, 2020 11:36 AM

சாதாரணமாக ஆரம்பித்த வாய்தகராறுக்காக, இளைஞரைத் திட்டம் போட்டு வரவைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : A Gang killed a youngster using country bomb in Medavakkam

சென்னையை அடுத்த தாம்பரம் ராஜகீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம். கார் டிரைவர் இருக்கிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஷியாமின் வீட்டிற்கு அருகே, மேடவாக்கத்தைச் சேர்ந்த அஜீத்,  அவரது நண்பரான சேலையூரைச் சேர்ந்த சிவா ஆகிய இருவரும் ஹெல்மட் போட்டபடி சுற்றித் திரிந்துள்ளார்கள். இதனைக் கவனித்த ஷியாம், சந்தேகப்படும்படியாக இருக்கிறதே என அவர்கள் இருவரையும் நிறுத்தி, யார் நீங்கள் எதற்கு இங்குச் சுற்றித்திரிகிறீர்கள் என விசாரித்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அஜீத், சிவா இருவரையும் ஷியாம் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த இருவரும், ஷியாமை எப்படியாவது பழி வாங்க வேண்டும் எனத் திட்டம் போட்டார்கள். அதன்படி ஷியாமின் பகுதியில் வசித்து வரும், தங்கள் நண்பர்கள் மூலமாக அஜீத்தும், சிவாவும் ஷியாமின் மொபைல் நம்பரை வாங்கினார்கள். பின்னர் ஷியாமைத் தொடர்பு கொண்ட இருவரும்,  ''நீ தைரியமான ஆளாக இருந்தால் மேடவாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்துக்கு வா டா'' எனச் சவால் விட்டுள்ளார்கள்.

இதையடுத்து ஷியாம், தனது நண்பர் வினோத் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு அங்குச் சென்றார். பின்னர் வினோத்தைச் சாலையோரம் நிற்க வைத்துவிட்டு, ஷியாம் மட்டும் தனியாக மைதானத்துக்குள் சென்றார். அப்போது அங்கு கடும் ஆத்திரத்தில் நின்று கொண்டிருந்த, அஜீத், சிவா மற்றும் அவரது நண்பர்கள்   ஷியாம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில்  ஷியாமின் கழுத்து, மார்பு போன்ற பகுதிகள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த கோரச் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான ஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஷியாம் உடன் சென்ற அவரது நண்பர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர், ''நாட்டு வெடிகுண்டுகளை வீசியதைப் பார்த்ததும் பயத்தில் அங்கிருந்து ஓடி விட்டேன், பின்னர் வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ஷியாம் இறந்து கிடந்தார்'' எனக் கூறினார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்துப் பேசிய போலீசார், ''ஷியாமின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான், ஷியாம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாரா? அல்லது பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் எனக் கூறியுள்ளார்கள். இதற்காக 3 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சாதாரணமாக ஆரம்பித்த வாய்தகராறுக்காக, இளைஞர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai : A Gang killed a youngster using country bomb in Medavakkam | Tamil Nadu News.