'ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் என்ன நடக்கும்'?.... 'பிரபல மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு'... வெளியான திடுக்கிடும் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் தற்போது உள்ள கொரோனா பரவல் நிலை நீடித்தால், அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி என்ன நடக்கும் என்பது குறித்து, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அதன் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரையிலான நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 694 ஆகும். சென்னையில் மட்டும் 19 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், நோய் பரவல் துறை தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட சில நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த குழுவுக்குக் கிடைத்த பல்வேறு தரவுகள், சான்றுகள் அடிப்படையில் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதன் ஆய்வு முடிவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவும் நிலை தொடர்ந்து நீடித்தால், ஜூலை மாதம் 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கையானது சென்னையில் மட்டும் 1.50 லட்சமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை என்பது தமிழகம் முழுவதும் 1,949 ஆக இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரைப் பலி எண்ணிக்கை என்பது 1,654 ஆக இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் அந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதில் உச்சக்கட்டமாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அதன் பிறகு தான் அதன் பாதிப்பு என்பது படிப்படியாகக் குறையும். தற்போது டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
