’பேஸ்புக்கை பிரேக்-அப் பண்ண நேரம் வந்துடுச்சு’.. இவரே இப்படி சொல்றாரா? அதிர்ச்சிப் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Siva Sankar | May 10, 2019 12:48 PM
பேஸ்புக்கினை நாம் அனைவரும் உதறித் தள்ளும் நேரம் வந்துவிட்டதாக பேஸ்புக்கின் இணை நிறுவனராகவும் பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பெர்க்கின் நண்பருமான க்றிஸ் ஹூக்ஸ் கூறியுள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இன்றைய தலைமுறை காலையில் எழுந்தால் அநேகமான முதல் வேலையாக பேஸ்புக் நோட்டிபிகேஷனைகளை சோதனை செய்வதாகவே இருக்கக் கூடும். அந்த அளவுக்கு சமூகத்தின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான தவிர்க்க முடியாத தளமாக மாறியுள்ள பேஸ்புக் தளம், அவரவரின் கருத்துக்களை பதிவிடுவதற்கான ஒரு பொதுத் தளமாகவும் உள்ளது.
2004-ஆம் ஆண்டு க்றீஸ் ஹூக்ஸ், டஸ்டின் ஆகிய நண்பர்களுடன் இணைந்து பேஸ்புக்கை மார்க் ஸக்கர்பெர்க் தொடங்கிய பிறகு, அடுத்த 3 வருடங்களுக்கு பிறகு, க்றிஸ் ஹுக்ஸ் பேஸ்புக்கிலிருந்து வெளியேறுகிறார். சரியாக 2007-ஆம் வருடம் வெளியேறிய க்றிஸ் அந்த 3 வருடங்களில் 3,500 கோடி ரூபாயை சம்பாதித்தார். ஆனால் அவர் பேஸ்புக்கை விட்டு வெளியேறியெ பின்னர், இந்த 10 வருடங்களில் பேஸ்புக் நிறுவனத்துக்காக க்றிஸ் எந்தவொரு பங்களிப்பையும் தராத நிலையில் அண்மையில் நியூ யார்க் டைம்ஸ் இதழுக்காக அவர் எழுதிய கட்டுரையில்தான் சர்ச்சைக்குரிய இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, ‘மார்க் தொடக்க காலத்தில் தான் பார்த்த நண்பனாகவும், எதிர்காலத்தில் மனைவியாகவிருக்கும் ஒரு பெண்ணின் காதலனாகவும், சிறுவீட்டில் இருந்துகொண்டு சின்சியராக உழைத்தவராகவும் இருந்தது போலவேதான் இப்போதும் இருக்கிறார். ஆனால் எந்தவொரு தொழிலிலும் ஏகபோகமான ஆட்கள் உருவாவதை அமெரிக்க தொல் வரலாறு சகித்துக்கொள்ளாததாகவே இருக்கிறது. ஆனால் மார்க்கும் ஃபேஸ்புக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவில் உருவாகியிருக்கிறார்கள்’ என்று கூறிய க்றிஸ், நல்லவரான மார்க் தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தனிநபரின் பாதுகாப்பைதியாகம் செய்ததுதான் தனக்கு கோபம் வரவழைத்ததாகவும் கூறியுள்ளார்.
அரசு எந்திரத்தையும் மக்களையும் இணைக்கும் பிளாட்பார்மான பேஸ்புக் ஒவ்வொருவரின் சிந்தனையிலும் என்ன ஏற வேண்டும், கண்ணிலும் என்ன பட வேண்டும் என்பதை ரூபமாகவும் அரூபமாகவும் பதிவுகளின் மூலம் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இது பேஸ்புக்கை பிரேக் அப் செய்யும் நேரம் என்று குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பச் சுவரினைத் தாண்டி தனிமனித பிரைவேசியை மூலதனமாக்கும் தொழில்நுட்ப முனையங்களை ரெகுலேட் செய்ய குடிமக்கள் பிரதிநிதித்துவ சார்பிலான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
