கும்மிருட்டில் சென்னை.. தமிழகம் முழுவதும் தட்டி வீசும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு இப்படித்தானாம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. அது முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் கும்மிருட்டுடன் மழை பெய்துவருகிறது. சில இடங்களில் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்துவரும் நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் தமிழ்நாட்டில் இன்று, சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை,வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர் (8ஆம் வகுப்புவரை), நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி, ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். அதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
