சென்னை : துக்க நிகழ்வுக்காக துபாயில் இருந்து வந்த குடும்பம்.. ஃபிரிட்ஜ் வெடித்து பலியான சோகம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரப்பாக்கம் பகுதியில் ஃபிரிட்ஜ் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட துயரம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "நோ.. இப்படி ட்ரை பண்ணு".. சிறுவனுக்கு கராத்தே டெக்னிக் சொல்லிக்கொடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் கோதண்டராமன் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, வெங்கட்ராமனின் ஒரு வருட நினைவு அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன் கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர் ராஜ் குமார் உள்ளிட்டோர் துபாயில் இருந்து சென்னை வந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், வெங்கட் ராமன் வீட்டில் அனைவரும் நேற்று இரவு தூங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஃபிரிட்ஜ் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் பதறி போக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது .
பின்னர் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடம் வந்து சேர்ந்தனர். இந்த விபத்தில் சிக்கி கிரிஜா, ராதா மற்றும் ராஜ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு பேர் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையின் படி சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி, வெங்கட் ராமன் இறந்த பின்னர், இந்த வீடு கடந்த ஒரு வருடமாக பயன்பாட்டில் இல்லை என்றும், இதனால் ஒரு வருடம் கழித்து ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஃபிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
Also Read | முதல் முறையாக விமானத்தில் ஏறிய தம்பதி.. பின்னாடி இருந்த பயணி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்!!

மற்ற செய்திகள்
