‘இது நிரந்தர அரசாங்க வேலை’!.. ‘எப்போனாலும் லீவு எடுக்கலாம்’ துப்புரவு பணியாளர் வேலைக்கு குவிந்த இன்ஜீனியரிங் பட்டதாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 28, 2019 12:50 PM

துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர்காணலுக்கு இன்ஜீனியரிங், டிப்ளமோ பட்டதாரிகள் குவிந்தனர்.

Engineering graduates applied for cleaning work job in Coimbatore

கோவை மாநகராட்சியில் 2000 பேர் நிரந்தர துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் 500 பேர் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பங்களை கோவை மாநகராட்சி வரவேற்றது. இதற்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வேலைக்கான தகுதி, குறைந்தபட்ச வயது 21 என்றும், அதிகபட்ச வயது 56 என்றும், தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர். மேலும் எஸ்.எஸ்.எல்.சி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு, இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள், இன்ஜீனியரிங் பட்டதாரிகள் என பலர் குவிந்தனர்.

இதுகுறித்து தெரிவித்த பட்டதாரி ஒருவர், ‘நாங்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை இல்லை. அதனால் இந்த வேலைக்கு வந்துள்ளோம். தனியாரில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தான் தருகிறார்கள். ஆனால் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை வேலை செய்யவேண்டும். வேலையும் நிரந்தரம் இல்லை. ஆனால் துப்புரவு வேலைக்கு சேர்ந்தவுடனேயே 20 ஆயிரம் கொடுக்கிறார்கள். காலை 3 மணிநேரம், மாலை 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். இடைப்பட்ட நேரங்களில் வேறு வேலை பார்த்துக்கொள்ளலாம். எல்லாத்துக்கும் மேலாக இது நிரந்தர அரசாங்க வேலை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. தேவைப்படும்போது விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #JOBS #COIMBATORE #ENGINEERING