தங்கத்தை கொண்டுபோய் எங்க வச்சிருக்காருனு பாருங்க.. சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து சிக்கிய ஆசாமிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் பல்வேறு கடத்தல் முயற்சிகளில் இருந்து சுமார் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொழில்நுட்ப உதவியோடு அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். இதன்மூலமாக கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.
முறியடிக்கப்பட்ட முயற்சிகள்
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கடத்தல் முயற்சிகளில் இருந்து சுமார் 2 கிலோ தங்கம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். திங்கட்கிழமை, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவரிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தினை பறிமுதல் செய்தனர். பயணி தனது மலக்குடலில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த நபரிடம் இருந்து தங்க செயின் மற்றும் புதுப்பிக்கப்பட்ட போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நாளில், பஹ்ரைனில் இருந்து சென்னை வந்த ஒருவரிடமிருந்து தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அவர் தனது பேண்ட் பாக்கெட்டுகளில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மொத்த மதிப்பு
இந்த கடத்தல் முயற்சியில் இருந்து சுமார் 2.62 கிலோ தங்க கட்டிகள் பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவற்றின் சந்தை மதிப்பு 1.21 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90,000 ரூபாய் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

மற்ற செய்திகள்
