"வீட்டை விட்டு கணவர் வெளியேற வேண்டும்"..விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போன மனைவி.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு சென்ற பெண் தனது குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கலாம் எனவும் வீட்டை விட்டு கணவர் வெளியேற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து
வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தரும்படி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்ற கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அந்த பெண். இந்த மனு மீதான விசாரணை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்துக்கொள்ளலாம் எனவும் ஆனால் மனைவியை கணவர் துன்புறுத்த கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மேல்முறையீடு
இந்நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வீட்டை விட்டு கணவர் வெளியேற வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் அந்த பெண்மணி. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது அவர், ஒரே வீட்டில் இருக்கும்போது கணவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பெண் அச்சம் தெரிவிக்கும் நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும்படி உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
உத்தரவு
மேலும், வீட்டில் இருந்து கணவர் வெளியேற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா அந்த பெண்ணை பெண்ணை தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டார். இதுபற்றி பேசிய அவர்,"கணவர் இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் காவல்துறையினரின் உதவியுடன் அவர் வெளியேற்றப்பட வேண்டும். கணவனால் வீட்டில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படும்போது மனைவியை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்க முடியாது" எனக் குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
