பொண்ணுக்கும் பொண்ணுக்கும் நடக்கும் கல்யாணம்.. "FUNCTION முடிஞ்சதும் இத FOLLOW பண்ணுவாங்களாம்".. வருசா வருசம் நடக்கும் வினோத சடங்கு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 17, 2022 05:57 PM

நாட்டில் உள்ள பல இடங்களில், கிராம மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், மிக மிக வினோதமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதை நாம் நிறைய கேள்விபட்டிருப்போம்.

woman weds woman tradition in karnataka tribe people

Also Read | கல்யாணத்து அன்னைக்கி சந்திச்ச அவமானம்.. மறுநாளே வேலை'ய ராஜினாமா பண்ண மணப்பெண்.. "அப்படி என்னய்யா நடந்துச்சு??"

அந்த குறிப்பிட்ட சமுதாயம் அல்லது பகுதியை சேர்ந்த மக்களுக்கு, அந்த பழக்க வழக்கங்கள் புதிதாக தோன்றாது. ஆனால், அதனை வெளியே இருந்து கேள்விப்படும் நபர்களுக்கு நிச்சயம் அவை, வியப்பை தான் கொடுக்கும்.

அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் உள்ள பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த மக்கள், பின்பற்றி வரும் ஒரு திருமண சடங்கு தொடர்பான செய்தி, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. Dadduve Maduve என அழைக்கப்படும் இந்த சடங்கானது, இரு பெண்களுக்கு இடையே நடைபெறும் திருமணம் குறித்ததாகும். இதனை கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள Halakki Okkaliga என்ற சமுதாய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஒரே பாலின திருமணங்கள், இன்றைய காலகட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றாலும், குறிப்பிட்ட பழங்குடி மக்கள், இந்த சடங்கினை ஏராளமான ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே கொண்டாடி வருகின்றனர். அதாவது, இது எப்போது ஆரம்பித்தது என்பது கூட, தற்போதுள்ள மக்களுக்கு தெரியாத அளவுக்கு பழமையான சடங்கு என்றும் கூறப்படுகிறது.

தங்களின் சமுதாயத்தில் உள்ள இரண்டு பெண்கள், மாலை அணிந்து ஒருவர் மாப்பிள்ளையாகவும், மற்றொருவர் மணப்பெண்ணாகவும் கருதப்படுவார்கள். வழக்கமான அனைத்து திருமண சடங்குகளும் இதில் பின்பற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சமீபத்தில் கூட Dadduve Maduve என்ற திருமண சடங்கு அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது.

woman weds woman tradition in karnataka tribe people

தேவைப்படும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழை பெய்து விட கூடாது என்பதற்காக, இந்திரனை வேண்டி, இந்த திருமண நிகழ்வை ஆண்டு தோறும் அந்த பழங்குடி மக்கள் நடத்தி வருகிறார்கள். ஊர்வலம் மற்றும் சடங்குகள் முடிவடைந்த பிறகு, புதிதாக திருமணமாணவர்களை அனைவரும் ஆசீர்வதிப்பார்கள். வழக்கமான திருமணம் போல, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்குவார்கள். அதன் பின்னர், ஆடல் பாடல் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அற்புதமான விருந்தும் வழங்கப்படுகிறது.

அனைத்து வித கொண்டாட்டங்களும் முடிவடைந்த பிறகு, அனைவரும் தங்களின் வீட்டிற்கு திரும்பி செல்வார்கள். திருமணமான இரண்டு பெண்கள் கூட ஒன்றாக இணைந்து வாழாமல், தனித்தனியாக பிரிந்து விடுவார்கள். ஆம், இது சடங்கிற்காக நடத்தப்படும் போலி திருமணம் போன்றது மட்டும் தான்.

Halakki பழங்குடி மக்களின் வாழ்வில், மழை என்பது மரியாதைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் தான், இப்படி ஒரு சடங்கினை ஆண்டு தோறும் பின்பற்றி, திருமணம் போல ஒரு போலி சடங்கு ஒன்றை மிக கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "எங்க அப்பா சாகுறதுக்கு முன்னாடி எழுதுன Letter இது.." 9 வருஷம் கழிச்சு தெரிஞ்ச 'உண்மை'.. "புள்ளைங்க கையில் கிடைக்கும்னு தெரிஞ்சே எழுதி இருக்காரு"

Tags : #KARNATAKA #WOMAN #WOMAN WEDS WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman weds woman tradition in karnataka tribe people | India News.