'இரண்டு வீரர்களுக்கு நிகரானவர் '... 'அவர் இந்திய அணியில் இல்லாதனால’... ‘எங்களுக்கு தான் சான்ஸ் ஜாஸ்தி’... ‘ஆஸ்திரேலிய முன்னாள் பவுலர் கருத்து’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2 வீரர்களுக்கு நிகரானவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் க்ளென் மெக்ராத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், முதல் டெஸ்ட் முடிந்த பிறகு அவர் இந்தியா திரும்புகிறார்.
இந்நிலையில் விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தனது முதல் குழந்தையின் பிறப்புக்காக விராட் கோலி திரும்பிச் செல்ல விரும்புவதை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் அவர் இல்லாதது தொடரை நிச்சயம் பாதிக்கும்.
ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் விராட் கோலி 2 வீரர்களுக்கு நிகரானவர். அதே நேரம் ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இடம்பெற்றுள்ளனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலத்தை அளிப்பதோடு, தொடரில் ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்பளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.