‘பைக் மீது மினிப்பேருந்து மோதி’... ‘சிறுவன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 25, 2019 06:35 PM

மதுரையில் 14 வயது சிறுவன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும், இருசக்கர வாகனத்தின் மீது மினிப் பேருந்து மோதியதில், மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bike accident in madurai, mother died, son injured

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள துணிக் கடையில் பணியாற்றி வந்தார். விஜயலட்சுமியை, அவரது 14 வயது மகன், இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று துணிக்கடையில் இறக்கி விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இன்றும் அதுபோல் தனது தாயை அவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இருவரும் தலைக்கவசம் அணியாமல், மதுரா கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்காரா நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி பேருந்து, இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது.

அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது மினிப் பேருந்து மோதவே மகன் இடதுபுறமும், தாய் வலதுபுறமும் சரிந்தனர். மகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பி விட, விஜயலட்சுமியின் தலையில் மினி பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #MADURAI