‘தமிழகத்தில் முக்கிய இடங்களில்’... ‘பாதுகாப்பு அதிகரிப்பு’... காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 07, 2019 05:59 PM

தமிழகத்தில் ரயில்நிலையம், விமானநிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

security tight in all over tamilnadu due kashmir issue

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த திங்கள்கிழமையன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அறிவுறுத்துதலின்படி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள எச்சரிக்கையை அடுத்து, தமிழக அரசு கூடுதல் காவல்துறை இயக்குநர்கள் தலைமையில் மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : #SECURITYTIGHT #TAMILNADU #MADURAI #AIRPORT