'வீடே மூழ்கி போச்சு'.. அந்த இழப்புக்கு பிறகு 'இப்படி ஒரு அனுபவம்'.. கேரள குடும்பத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Aug 12, 2019 01:29 PM

ஒரு பெரிய  பேரிடர், மீண்டும் இந்த உலகில் ஏற்படும் இயற்கை அச்சுறுத்தல்களில் எப்படி வாழவேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்.

after suffered in KeralaFloods2018, A family got a new idea

அந்த பேரிடரில் நடந்த துயரமான அனுபவத்தையும், இழந்ததையும் நினைத்து வருந்திக்கொண்டு, தம்மைத்தாமே வருத்திக்கொள்ளாமல், விரைந்து அடுத்த முன்னெச்சரிக்கையை செயல்படுத்தியுள்ள கேரள குடும்பத்தினர் இணையத்தில் பலரின் இன்ஸ்பிரேஷனுக்குக் காரணமாகியுள்ளனர்.

சென்ற வருடம் கேரளாவில் உண்டான வெள்ளத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. அகலமாக விரியாம, நேர்ப் போக்கில் நீண்டு செல்லுமாறு நிலவமைப்பு கொண்ட கேரளாவிற்கு அது ஒரு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கேரளாவின் ஆலப்புழாவில் இருந்த, செருதனாவில் இருந்த கேரள குடும்பம் ஒன்று, கடந்த வருடமான 2018-ஆம் ஆண்டு கேரளாவில் உண்டான வெள்ளத்தில், வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால், வீட்டை இழந்தது.

இந்த நிலையில், இம்முறை கடந்த வருடத்துக்கு நிகராக இல்லையெனினும், கடவுளின் தேசம் தண்ணீரில் தத்தளிக்கவே செய்கிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அளவுக்கு மழை பொழியும் நிலை இருக்கிறது. ஆனால் கடந்த வருடமே பாதிக்கப்பட்ட அந்த கேரள குடும்பம், இந்த ஓராண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டியுள்ளது.

அதன் பேஸ் பகுதியானது தரைமட்டத்தில் இல்லாமல், தரைமட்டத்தில் இருந்து லிஃப்ட் செய்யப்பட்ட ஒரு ஸ்மார்ட் கேர் ஹவுஸாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு துன்பத்தில் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவத்தை பாசிட்டவாக சொல்லும் இந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Tags : #KERALAFLOOD #KERALA #SMARTCAREHOUSE