கடைசில 'சந்திர மண்டலத்துக்கு' போற மாதிரி 'ஆக்கிட்டாங்களே...' 'இருந்தாலும் பாதுகாப்புதான் முக்கியம்...' 'அசத்தும் தஞ்சை போக்குவரத்துக் கழகம்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 23, 2020 05:10 PM

சுகாதார பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்துச் செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு, கொரோனா தடுப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.

For government bus drivers, coronation barriers provided

தஞ்சையில் உள்ள அரசு துறை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்டோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் சென்று வருவதற்காக மட்டும், தஞ்சையில் இருந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதுார், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பூதலுார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, ஏற்கனவே முகக் கவசம், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பேருந்து ஓட்டுநர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கவச உடைகளை அணிந்து, ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கி வருகின்றனர்.