சென்னையின் 'பிரபல' மால்... மூடப்படுவதற்கு முன் 'அங்கு' சென்றவர்கள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பிரபல மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு முன் அங்கு சென்றவர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 110 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரியலூர் பெண் ஒருவர் 30-வது நபராக பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர், கடந்த 15-ம் தேதி சென்னையில் உள்ள பீனிக்ஸ் மால் மூடப்பட்டது. அதற்கு 10 நாட்கள் முன்பு பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.