தமிழகத்தில் ஒரே நாளில் ‘110 பேருக்கு’ கொரோனா தொற்று உறுதி.. மாவட்டம் வாரியான விவரம் வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 110 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 124 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று (01.04.2020) சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 110 பேரின் மாவட்ட வாரியான விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
1. கோவை - 28
2. தேனி - 20
3. திண்டுக்கல் - 17
4. மதுரை - 9
5. செங்கல்பட்டு - 7
6. திருப்பத்தூர் - 7
7. திருநெல்வேலி - 6
8. சிவகங்கை - 5
9. ஈரோடு - 2
10. தூத்துக்குடி - 2
11. திருவாரூர் - 2
12. காஞ்சிபுரம் - 2
13. கரூர் - 1
14. சென்னை - 1
15. திருவண்ணாமலை - 1
