மதுரையில் 2 கிராமங்களுக்கு முற்றிலும் 'சீல்' வைத்து... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!... கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 01, 2020 07:41 PM

மதுரையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

madurai two villages completely locked amid covid19 severity

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை நரிமேடு, தபால்தந்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்த பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவும், உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் சுகாதாரத்துறை மூலமாக கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. வரும் 4 நாட்களுக்கு இந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற தடை விதிக்கப்பட்டது.

மேலும், மருந்துகடைகளை தவிர அனைத்து கடைகளையும் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக தெரிவிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு வீடுகளுக்கு சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

 

Tags : #CORONAVIRUS #CORONA #MADURAI #VILLAGES