'இங்க' வர்றவங்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய மாட்டோம்... பட் ஒரு கண்டிஷன்... 'துணிச்சல்' அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாநிலத்துக்கு வரும் நபர்கள் கட்டாயம் டெஸ்ட்டுக்கு உட்பட வேண்டியதில்லை என மாநில முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் தற்போது நாடு தழுவிய ஊரடங்கு 5-வது முறையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. விரும்பினால் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் விமான சேவையை தொடங்கவும் அனுமதி அளித்தது. ஆனால் எந்த மாநிலங்களும் இதுவரை அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் கோவா மாநிலத்திற்குள் நுழையும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கிரினீங் பரிசோதனை செய்யப்படும். அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லலாம். ஆனால் குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என கோவா மாநில முதல்வர் பிரமோத் சவந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ''கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் மக்கள் கோவா மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாதவர்களுக்கு இது பொருந்தும். நாளையில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆனால், டெஸ்டை புறக்கணிக்கும் நபர்கள் கட்டாயம் குடும்ப உறுப்பினர்களுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் நபர்கள் அதற்கான முடிவு வரும் வரை தனிமைப்படுத்துதலில் இருப்பார்கள்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்
