BREAKING: 'தமிழகத்தில் நாளை காலை வரை மக்கள் ஊரடங்கு!'... தமிழக அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகளின் ஒரு முன்னோட்டமாக மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையொட்டி, தமிழகத்தில் பிரதானமான சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இதனால், நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மக்கள் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்த தமிழக அரசின் அறிவிப்பில், பொதுமக்கள் தாமாகவே முன் வந்து மேற்கொண்ட சுய ஊரடங்கு இன்று இரவு 9 மணிக்கு நிறைவுபெறவுள்ளது. இந்த ஊரடங்கு நிகழ்வு மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. எனினும், அத்தியாவசியப்பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
