வாரச்சந்தைகள், 'சூப்பர்' மார்க்கெட்டுகள், நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளை... 'தமிழகம்' முழுவதும் மூட உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 20, 2020 02:13 PM

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் அதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகள், பெரிய ஜவுளிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் நகைக்கடைகளை வருகின்ற 31-ம் தேதி வரை மூடிடுமாறு தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

TN Government ordered close Super Markets and Textiles

இதுகுறித்து தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வணிக வளாகங்கள், மால்கள் ஆகியவை தமிழக அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.