‘முதுகுவலி’ என வந்தவரின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து ‘ஷாக்’ ஆன டாக்டர்.. உலகத்துலேயே ஒரு சிலருக்குதான் இப்டி இருக்குதாம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 09, 2020 08:12 AM

முதுகுவலி என மருத்துவமனை சென்றவரின் உடலில் 3 கிட்னிகள் இருப்பது கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 year old Brazilian man with back pain finds out he has 3 kidneys

பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் முதுகுவலிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் உடலை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் அவருக்கு சகஜமான முதுவலிதான் என்றும், பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஸ்கேனில் ரிப்போர்ட்டில் அவருக்கு 3 கிட்னிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். அவரின் இடது புறம் ஒரு கிட்னியும், வலது புறம் 2 கிட்னிகள் இருந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், நமது உடலில் உள்ள 2 கிட்னிகளும் சிறிய குழாய் வழியாக சிறுநீரகப்பையை அடையும். ஆனால் அவருக்கு உள்ள 3 வது கிட்னி எந்த ஒரு குழாய் வழியாகவும் இல்லாமல் நேரடியாக சிறுநீரகப்பையில் இணைந்துள்ளது. ஆனாலும் அந்த நபருக்கு கிட்னி சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் இன்றி அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்பட்டு வருகிறது.

இதுபோல் 3 கிட்னிகள் இருப்பது எந்தவொரு அறிகுறிகளையும் ஏற்படுத்தாது என்பதால், அதை கண்டுபிடிப்பது கடினம். மக்கள் இதை தற்செயலாக அல்லது வேறு சில உடல் பிரச்சனையின் போது கண்டறிகின்றனர். இந்த மாதிரியான நிகழ்வுகள் கரு வளர்ச்சியின் போது நடக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை உலகில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் 3 கிட்னிகள் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.